Advertisement

தலைமை நீதிபதிக்காக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

பொது செப்டம்பர் 09,2019 | 16:42 IST

Share

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி செப்டம்பர் 10ம் தேதி செவ்வாயன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சேலத்தில் நடந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற புறக்கணிப்பில் சுமார் 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. byte சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2018 ஆகஸ்டில் தகில் ரமாணி பதவியேற்றார். தற்போது அவரை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலனை செய்ய கோரி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு தகில் ரமாணி அனுப்பிய மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், பணியிட மாற்ற முடிவை எதிர்த்து அவர் ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X