Advertisement

மனித சங்கிலி போராட்டம்

சம்பவம் செப்டம்பர் 09,2019 | 18:40 IST

Share

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 3 புதிய மாவட்டங்கள் உருவக்கப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இதனையடுத்து நெடுங்காலமாக அரக்கோணம் தலைமையிடமாக கொண்ட மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த அரக்கோணம் மக்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்தது. தமிழக அரசு அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற்று ராணிப்பேட்டைக்கு பதிலாக அரக்கோணம் தலைமையிடமாக கொண்ட மாவட்டத்தை அறிவிக்கச் வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களில் அரக்கோணம் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரக்கோணம் வட்டாச்சியர் அலுவலகம் அருகில் அரக்கோணம் வட்டாச்சியர் அலுவலகம் முதல் எஸ்.ஆர்.கேட் பகுதி வரை கைகளை இணைத்துக்கொண்டு அணிவகுத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X