Advertisement

பொதுஇடத்தில் தாய்பால் கொடுக்க தயக்கம் எதற்கு?

பொது செப்டம்பர் 10,2019 | 12:46 IST

Share

பொதுவெளியில் தாய்ப்பால் கொடுக்க தயங்கக் கூடாது என்பதை மையப்படுத்தி, 'கோயம்புத்துார் பேரன்டிங் நெட்வொர்க்'ஐ சேர்ந்த தாய்மார்கள் கோவில், பேருந்து, ஜிம், துணிக்கடை என்று பொது இடங்களில், தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொது இடங்களில் பாலூட்டும் படங்களை போட்டோ சீரிஸ் எடுத்து, 'அச்சமில்லை' என்ற பெயரில் தாங்கள் சார்ந்த சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். குழந்தைக்கு இரண்டு வயது நிரம்பும் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்று, உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தாய்ப்பால் என்பது, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. தாய்க்கும் குழந்தைக்குமான பிணைப்பை பலப்படுத்தும், இந்த உன்னத விஷயத்தை, அந்நியமாக பார்க்கும் நிலை மாற வேண்டும் என்கிறார்கள் இந்த 'அச்சமில்லை' தாய்மார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X