Advertisement

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை

பொது செப்டம்பர் 10,2019 | 16:00 IST

Share

புதுச்சேரி துத்திப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மாசு படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, சுற்றுச்சூழல் அமைச்சர் கந்தசாமி துத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள முந்திரி எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அந்நிறுவனம் முறைகேடாக ஆழ்துளை கிணறு மூலமாக அதிக அளவு நீர் உறிஞ்சுவதும், கழிவுகளை அருகிலுள்ள ஏரியில் கலப்பது தெரிந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முந்திரி எண்ணெய் தயாரிக்கும் அந்நிறுவனத்தின் மற்றொரு கிளை சேதராப்பட்டில் இயங்கி வருவதால் அங்கும் ஆய்வு மேற்கொண்டார். அந்நிறுவனத்தின் உரிமம் புதுப்பிக்கவில்லை என தெரியவந்து. எனவே, அந்நிறுவனத்தின் மின் இணைப்பைத் துண்டிக்க உத்தவிட்டதையடுத்து மின் ஊழியர்கள் இணைப்பைத் துண்டித்தனர். தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் கந்தசாமி, ஆழ்துளை குழாய் அமைத்து முறைகேடாக நீர் உறிஞ்சப்படுவது தெரிவந்தால் நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்ட விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இழுத்து மூடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X