Advertisement

Baby's Night Out ஜீப்பில் இருந்து விழுந்த குழந்தை தப்பிய அதிசயம்

சம்பவம் செப்டம்பர் 10,2019 | 15:00 IST

Share

மூணாறு சாலையில் ஜீப்பிலிருந்து விழுந்த ஒரு வயது குழந்தை பாதுகாப்பான இடத்தைத்தேடி தவழ்ந்து சென்ற அதிசயம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: மிருகங்கள் நிறைந்த மூணாறு காட்டுப்பகுதியில் உள்ள ராஜமலை செக்போஸ்ட் அருகே ஞாயிறு இரவு 10 மணிவாக்கில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தமாக கேட்டது. பணியில் இருந்த வன அதிகாரிகள் வெளியே ஓடிவந்து பார்த்தபோது, செக்போஸ்ட்டின் டிக்கெட் கவுண்டரை நோக்கி சாலையில் குழந்தை தவழ்ந்து வருவதை கண்டனர். வன அதிகாரிகள் ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கினர். அது பெண் குழந்தை. நெற்றி, மூக்கு என முகத்தில் சிராய்ப்புக்காயங்கள் இருந்தன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X