Advertisement

2 திருமணம்; செய்த கணவனை புரட்டியெடுத்த மனைவிகள்

பொது செப்டம்பர் 10,2019 | 17:31 IST

Share

கோவை, சூலூர், நேரு நகரை சேர்ந்த அரவிந்த், திருப்பூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரை 2016ல் திருமணம் செய்துள்ளார். சில தினங்களிலேயே மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதால், அவர் தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதற்கிடையில், மேட்ரிமோனியல் வலைதளத்தில் மீண்டும் மணமகள் தேடிய அரவிந்த், முதல் திருமணம் நடந்ததை மறைத்து, கரூரை சேர்ந்த அனுப்பிரியாவை ஆகஸ்டில் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அனுப்பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் குழந்தை உள்ளது. அவரையும் அரவிந்த் அடித்து சித்ரவதை செய்ததால், கொடுமை தாங்காமல் அனுப்பிரியா தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைடுத்து, மீண்டும் மூன்றாவது திருமணம் செய்ய மணப்பெண் தேடி வளைதளத்தில் விண்ணப்பித்துள்ளார் அரவிந்த். இதையறிந்த இரு மனைவிகளும், அரவிந்த வேலை செய்யும் இடத்திற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது வெளியேவந்த அரவிந்தனை இரு மனைவிகளும், சரமாரியாக அடித்து வெளுத்துவாங்கினர். சூலூர் போலீசார் மூவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X