Advertisement

விஜய் 65 : இவருக்கா?

சினிமா வீடியோ செப்டம்பர் 11,2019 | 18:00 IST

Share

விஜய்யின் அடுத்த படம் இவருக்கா? அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. செப்.,19ல் இசை, டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடக்கிறது. இதையடுத்து, விஜய்யின் 64வது படத்தை, 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்நிலையில், விஜய்யின் 65 படத்தை, பேரரசு இயக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது. விஜய்யை வைத்து ‛திருப்பாச்சி, சிவகாசி' எனும் இரண்டு வெற்றி படங்களை கொடுத்தவர் பேரரசு. அதன்பின் இந்த கூட்டணி இணையவில்லை. தற்போது விஜய்க்காக ஒரு மாஸான கதையை பேரரசு தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது சாத்தியமா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரியவரும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X