Advertisement

மின்சார உயர் கோபுரத்தில் ஏறியவரால் பரபரப்பு

சம்பவம் செப்டம்பர் 13,2019 | 12:00 IST

Share

வேலூர், சேண்பாக்கம் பகுதியில் வேலூர் மின் பகிர்மான துணை மின் நிலையம் உள்ளது. இங்கு திடீரென ஒருவர் சுற்று சுவர் ஏறி குதித்து மின்சார உயர் கோபுரத்தில் ஏறினார். மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வேலூர் முழுவதும் செல்லும் மின்சாரத்தை நிறுத்தினர். வேலூர் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கீழே இறங்காததால், தீயணைப்புத்துறையினர் ஏணி மூலம் ஏறி பத்திரமாக இறக்கினர். இருந்தாலும் உயர் மின் கோபுரத்தில் ஏறியதால் ஆங்காங்கே காயம் ஏற்பட்டது. இதனால் வேலூர் நகர் முழுவதும் ஒன்றரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டது போலீசார் விசாரணையில், அவர் பெயர் திகம்பர் சிங் என்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தன்னுடைய மாநிலத்திலிருந்து லாரியில் வந்ததாகவும் இங்கே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X