Advertisement

அம்மன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் நகைகள் திருட்டு

சம்பவம் செப்டம்பர் 13,2019 | 14:30 IST

Share

பொள்ளாச்சி, நெகமம் அருகே கப்பளாங்கரையில் உள்ள மகாலட்சுமி அம்மன், பெருமாள் கோயிலில் பூஜை முடிந்து, பூசாரி சுப்ரமணி, வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றுள்ளார். வெள்ளியன்று காலையில் வந்துபார்த்தபோது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 2 அம்மன் சிலைகள், 2 பெருமாள் சிலைகள் என 4 ஐம்பொன் சிலைகள் காணாமல் போயிருந்துள்ளன. அம்மனுக்கு சூட்டப்பட்டிருந்த வெள்ளி கிரீடம், வெள்ளி ஒட்டியாணம், தங்கதாலியும் திருடு போயிருந்தது. கோயிலின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சிலைகள், நகைகளை திருடிசென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தமிழகத்தில் திருடுபோன பழைமையான கோயில் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் மீட்டு வரும் நிலையில், மறுபுறம், கோயில் சிலைகள் களவு போவதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X