Advertisement

சும்மா கிடக்குது அம்மா பூங்கா; ரூ.30 லட்சம் வீணாகுது

பொது செப்டம்பர் 14,2019 | 17:11 IST

Share

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் 30 லட்சம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய அம்மா விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கருவிகள், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி தரைதளம், இருக்கைகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த பூங்கா, பணிகள் முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால், பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் துரு பிடித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பராமரிப்பில்லாததால், பூங்காவை சுற்றியும் புதர்கள் வளர்ந்துள்ளன. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு உடனே திறந்து வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X