Advertisement

பொருளாதாரம் மீண்டு வருகிறது நிர்மலா அறிவிப்பு |Finance Minister Nirmala Sitharaman

அரசியல் செப்டம்பர் 14,2019 | 18:37 IST

Share

பொருளாதார சூழ்நிலை குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நாட்டின் பணவீக்கம் 4 சதவீதத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதையே காட்டுகிறது என்றார். முதலீடுகள் அதிகரித்து வருகிறது, அன்னிய செலாவணி கையிருப்பு போதுமான அளவுக்கு இருக்கிறது என்றார். உற்பத்தி துறையில் ஏற்பட்ட சிறு சறுக்கலை சரி செய்யும் முயற்சி செய்யப்படுகிறது, எனவே பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் தொழில்துறையினருக்கு வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது என்றார். வரி செலுத்தும் முறை மேலும் எளிமையாக்கப்படுவதுடன், வரி செலுத்துவதில் சிறு தவறுக்கான தண்டனைகள் நீக்கப்படுவதாகவும் அறிவித்தார். சிறுகுறு தொழில் துறையினருக்கு அதிக கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜவுளி துறைக்கான புதிய திட்டம் 2020 ஜனவரி 1ல் துவங்கப்பட்டு, நான்கு இடங்களில் மெகா ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும் என்றும் இதன் மூலம் ஏற்றுமதி அதிகரிக்கவும் வழிவகை செய்யப்படும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X