Advertisement

மாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது

சம்பவம் செப்டம்பர் 15,2019 | 13:00 IST

Share

நாகை, குத்தாலம் அருகே உள்ள ஆலங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர், மாரீஸ்வரன. கொத்தனார் வேலை பார்தது வருகிறார். குத்தாலதம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி விருப்பம் தெரிவிக்காததால், வெறுப்படைந்த மாரீஸ்வரன், மாணவிக்கு தாலி கட்டிவிட்டால் தனக்கு எப்படியும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், 10-ஆம் தேதியன்று, சாலையில் நடந்து சென்ற மாணவியை கட்டிப்பிடித்து கழுத்தில் தாலியை கட்டி விட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாரீஸ்வரனை விரட்டினர். குத்தாலம் போலீசார் மாரீஸ்வரனை கைது செய்து குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X