Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு செப்டம்பர் 15,2019 | 17:40 IST

Share

சவுரப் வர்மா சாம்பியன் வியட்நாமில், சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சவுரப் வர்மா, சீனாவின் சன் பெய் ஜியாங் மோதினர். ஒரு மணி நேரம், 12 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சவுரப் வர்மா 21-12, 17-21, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ----- கோப்பை வென்றார் லக்சயா பெல்ஜியத்தில், சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் ஸ்வென்ட்சன் மோதினர். மொத்தம் 35 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய லக்சயா சென் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ----- தமிழ் தலைவாஸ் 11வது தோல்வி இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ், ஹரியானா அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி 35-43 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது. இது இத்தொடரில் தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 11வது தோல்வி. தமிழ் தலைவாஸ் அணி, 16 போட்டியில், 3 வெற்றி, 2 'டை', 11 தோல்வி என, 27 புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளது. ----- ஆசிய கோப்பை: இளம் இந்தியா சாம்பியன் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. இந்திய அணி 32.4 ஓவரில் 106 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணி 33 ஓவரில், 101 ரன்னுக்கு சுருண்டு 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் அதர்வா 5 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து இந்திய அணி 7வது முறையாக ஆசிய கோப்பை வென்றது. -----


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X