அரசியல் » பொதுத் தேர்வு தேவையில்லாதது | DMK | Durai Murugan | Vellore | Dinamalar செப்டம்பர் 16,2019 00:00 IST
வேலூரில் உள்ள ஊரீசுக ல்லூரியில் தேவநேயபாவாணர் தமிழ்மன்ற துவக்க விழா நடைபெற்றது. சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தமிழ்மன்றத்தைத் துவங்கி வைத்தார். விழாவில் எம்.பி.,க்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், கல்லூரி முதல்வர் வில்சன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் பேட்டியளித்த, துரைமுருகன், மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்கள் ஹிந்தி திணிப்பை தான் புகுத்துகிறார்கள். தற்போது ஹிந்தியை திணிப்பது ஒன்றும் புதியதல்ல என்றார். தமிழகத்தில் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. எட்டாம் வகுப்பிற்கும், ஐந்தாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என்று கூறுவது சாத்தியமில்லை அமைச்சர்கள் பொதுத் தேர்வை 8 ஆம் வகுப்பிலும் ஐந்தாம் வகுப்பிலும் எழுதிவிட்டா வந்தார்கள் என கேள்வி எழுப்பினார்.
வாசகர் கருத்து