சினிமா வீடியோ » 'காப்பான்' - சூர்யாவை காக்குமா? செப்டம்பர் 17,2019 17:45 IST
வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணித்து வந்த சூர்யா, 'அஞ்சான், மாசு என்கிற மாசிலாமணி, 24, சி 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே' என தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகிறார். இவற்றை 'காப்பான்' படம் மாற்றும் என நம்புகிறார் சூர்யா. கே.vi. ஆனந்த் இயக்கத்தில் பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படம் செப்.,20ல் ரிலீஸாகிறது. சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா என மல்டிஸ்டார் என்பதால் தென்னிந்திய அளவில் இப்படம் வெற்றிகளைக் குவிக்கும் என படக்குழுவும் எதிர்பார்க்கிறது. 'காக்க காக்க' படம் 2003ல் தந்த ஒரு திருப்புமுனையை 2019ல் 'காப்பான்' தந்து சூர்யாவைக் காக்கும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.
வாசகர் கருத்து