பொது » 4 தமிழக MP பதவி தப்புமா? செப்டம்பர் 17,2019 18:00 IST
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். வேறு கட்சியை சேர்ந்த இவர்கள், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி,கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது சரியானதா என கேள்வி எழுப்பினர்.
வாசகர் கருத்து