பொது » போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் செப்டம்பர் 18,2019 16:29 IST
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். புதுச்சேரி உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 140 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 3 மாதங்களாக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரியும், கடந்த ஆண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் செவ்வாய் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு பெரிய அளவில் பதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (காரைக்கால்) இதேபோல் காரைக்காலில் புதனன்று காலை முதல் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 10 நகர பேருந்துகள் உள்ளிட்ட 32 பேருந்துகள் காரைக்கால் மாவட்டத்தில் இயக்கப்படவில்லை. பி.ஆர்.டி.சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய ஊழியர்கள், நிலுவையிலுள்ள 4மாத ஊதியத்தையும் வழங்குவதுடன், தங்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி, மாதந்தோறும் இந்த தேதியில் ஊதியம் வழங்குவதாக தேதி நிர்ணயம் செய்யவும் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து