சம்பவம் » ஸ்கூட்டரில் வைத்த பணம் திருட்டு; சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர் செப்டம்பர் 18,2019 18:51 IST
சத்தியமங்கலத்தை அடுத்த மாரனூரை சேர்ந்த விவசாயி சண்முகம், பாரத ஸ்டேட் வங்கியில் நகையை அடகு வைத்து 1,70,000 ரூபாய் பெற்றுள்ளார். பணத்தை ஸ்கூட்டர் பெட்டியில் வைத்து பூட்டிய சண்முகம், வீட்டிற்கு செல்லும் வழியில் பத்திர பதிவு அலுவலகம் அருகே பைக்கை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றுள்ளார். வங்கியிலிருந்து நோட்டமிட்டு, பின்தொடர்ந்து வந்த நபர் லாவகமாக பெட்டியை திறந்து பணத்தை கொள்ளையடித்து சென்றார். அவர் பணத்தை திருடிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், மர்ம நபரை சத்தியமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து