சம்பவம் » கார்-லாரி மோதல் இருவர் பலி செப்டம்பர் 19,2019 13:00 IST
கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ஏமப்பேர் மேம்பாலத்தில், கோபிசட்டிபாளையத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் மூவர் வந்து கொண்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கி பார்சல் ஏற்றி சென்ற லாரியின் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் கார் மீது அதிவேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். கார் சாலையோரம் நொறுங்கி அப்பளம் போல ஆனது. இதில் காரில் பயணம் செய்த கோபி சட்டிபாளையத்தைச் சேர்ந்த ரங்கசாமி மற்றும் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கார் ஓட்டுனர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாசகர் கருத்து