Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு செப்டம்பர் 20,2019 | 19:50 IST

Share

வெற்றிக்கு காரணம் யார் இந்திய கேப்டன் கோஹ்லி குறித்து முன்னாள் துவக்க வீரர் காம்பிர் கூறுகையில்,''கோஹ்லி சிறந்த கேப்டனாக செயல்படுகிறார். இதற்கு, இந்திய அணியில் 'சீனியர்' தோனி, துணைக் கேப்டன் ரோகித் சர்மா இருப்பது தான் முக்கிய காரணம்,'' என்றார். -------------------------- ரிஷாப் பன்ட்டிற்கு ஆதரவு இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,''தோனி தொடர்ந்து அணியில் நீடிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தந்து சோதிக்க வேண்டும். விக்கெட் கீப்பர் இடத்துக்கு எனது தேர்வு ரிஷாப் பன்ட் தான்,'' என்றார். --------------------------- சுஷில் குமார் தோல்வி கஜகஸ்தானின் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் 74 கி.கி., பிரிவு பிரீஸ்டைல் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சுஷில் குமார் 9-11 என, அஜர்பெய்ஜானின் காஜிர்முராத்திடம் வீழ்ந்து பதக்க வாய்ப்பை இழந்தார். -------------------------- சாய் பிரனீத் ஏமாற்றம் சீனாவில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரனீத், இந்தோனேஷியாவின் அந்தோணி சினிசுகாவிடம் 21-16, 6-21, 16-21 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X