Advertisement

வாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்

பொது செப்டம்பர் 20,2019 | 19:00 IST

Share

சைபர் குற்றங்களைத் தடுக்க சமூக வலைதளக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கோரி ஆண்டனி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி, மக்கள் தங்கள் கருத்துகளைப் பகிருவதற்கு தளம் அமைத்துக் கொடுத்துவிட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்குப் பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ் அப் நிறுவனம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தனர். மேலும், வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியாவின் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்த எந்த அமைப்பு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, வலைதளங்களைக் கண்காணிக்கவும், தவறான தகவல்களைக் கண்டறியவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X