Advertisement

சிறை காண்காணிப்பாளர் சிறையில் அடைப்பு

சம்பவம் செப்டம்பர் 21,2019 | 12:00 IST

Share

புதுச்சேரியில் 2018 ஆம் ஆண்டு பாகூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயமூர்த்தி என்ற வாலிபர், காவல் நிலைய விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, பாகூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், உதவி சப்-இன்ஸ்பெக்டர், சிறைத்துறை சூப்பிரண்ட் பாஸ்கர், சிறை மருத்துவர், ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அப்பீல் செய்த பெயில் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வெள்ளியன்று ஆஜரான சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கர், சிறையில் அடைக்கப்பட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X