Advertisement

அதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு

பொது செப்டம்பர் 21,2019 | 12:00 IST

Share

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில், 7 கோடியே 5௦ லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் இருதய உள்ளூடுருவி ஆய்வகம் மற்றும் புதிய கட்டடங்களுடன் கூடிய மையம் உள்ளிட்டவற்றை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் ஆகியோர், திறந்து வைத்தனர். பின்னர் பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான விழுப்புரத்தில், அதிநவீன மேம்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அவசர சிகிச்சை மையம் செயல்படும். . சென்னைக்குப் பிற்கு விழுப்புரத்தில் தான் மேம்படுத்தப்பட்ட உலக தரத்திலான அவசர சிகிச்சை மையம், தொடங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையில் 2,345 செவிலியர் பணியிடங்களும், 500 மருத்துவர் பணியிடங்களும், 510 தொழில் நுட்ப ஊழியர்களும் பணியிடங்களும் நியமனம் செய்யப்பட உள்ளது என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X