Advertisement

11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்

பொது செப்டம்பர் 21,2019 | 12:40 IST

Share

தமிழக அரசு, சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க மீனவர்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து விற்பனை செய்வதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. சோதனையில் ஈடுபட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், சட்டத்திற்கு விரோதமாக சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 11 டன் மத்தி மீன்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள், நாகை துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில், 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்குப் பொது ஏலத்தில் விடப்பட்டது. சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் எனவும், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X