பொது » கல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு செப்டம்பர் 21,2019 13:00 IST
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக 12 வகுப்பறைகள், 2 ஆய்வகம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் cv .சண்முகம் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் அன்பழகன், கல்லூரி மாணவர்களின் போராட்டம் குறித்து பேட்டியளித்தார். தேர்வு கட்டணம் ஒரே நாளில் உயர்த்தியது அல்ல ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது தான் உயர்த்தப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் உயர்வு குறித்து மாணவர்களி்ன் கோரிக்கையை பல்கலைக்கழகத் துணைவேந்தரும் பேசி கட்டணத்தைக் குறைக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
வாசகர் கருத்து