ஆன்மிகம் வீடியோ » அஷ்டமி சிறப்பு யாகம் செப்டம்பர் 22,2019 13:00 IST
காரைக்கால் அடுத்த நித்திஸ்வரத்தில் உள்ள ஸ்ரீநித்திஸ்வரர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியான சனியன்று இரவு ஸ்ரீபைரவி உடனுறை காலபைரவருக்கு சிறப்பு யாகம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி கோவிலலை வலம் வந்து புனித நீராலும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து