ஆன்மிகம் வீடியோ » ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 22,2019 20:00 IST
சென்னை செங்குன்றம் அடுத்த வடகரை கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோயிலின் விமான கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதே போல கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ பாலசுப்ரமணியர் சன்னதிகளின் கோபுர கலசங்கள் மீதும் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் செங்குன்றம் மற்றும் அ தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.
வாசகர் கருத்து