விளையாட்டு » வாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி செப்டம்பர் 23,2019 19:32 IST
அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கோவை- 10வது மண்டல இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான வாலிபால் போட்டி, கோவை, ஸ்ரீஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. 18 அணிகள் பங்கேற்றன. திங்களன்று நடந்த போட்டியில், எஸ்.வி.எஸ்., கல்லூரி 2-0 என்ற செட் கணக்கில், பொள்ளாச்சி பை டெக் கல்லூரியையும் கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரி 2-0 என்ற செட் கணக்கில், சி.ஐ.இ.டி., கல்லூரியையும் வென்றன. பி.ஏ., கல்லூரி, 2-1 என்ற செட் கணக்கில், சி.எம்.எஸ்., கல்லூரியையும், ஸ்ரீஈஸ்வர் கல்லூரி 2-0 என்ற செட் கணக்கில், ஈஷா கல்லூரியையும் வென்றன.
வாசகர் கருத்து