Advertisement

கிருஷ்ணகிரியில் நாசவேலைக்கு சதி: பயங்கரவாதியிடம் என்.ஐ.ஏ.,விசாரணை

பொது செப்டம்பர் 24,2019 | 13:31 IST

Share

வங்கதேசத்தின் ஜமாத் உல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கவுசர் என்ற ஜஹிதுல் இஸ்லாம் என்பவனை கர்நாடக மாநிலம் ராம்நகரில் கடந்த மாதம் என்.ஐ.ஏ., போலீசார் கைது செய்தனர். 2014ல் மேற்கு வங்கத்தின் புர்ட்வான் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு; 2018ல் போத் கயா குண்டுவெடிப்பு மற்றும் சோலதேவனஹள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிதான் இந்த கவுசர். இவன், கிருஷ்ணகிரியில் உள்ள சையது பாஷா மலை மீது பதுங்கியிருந்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்ததால், கவுசரை மலை மீது அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த மலையில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது தெரியவந்தது. அதற்காக பயன்படுத்தப்பட்ட பைப்புகள், 4 பேட்டரி, ஒயர்கள், தீபெட்டி, டேப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், கவுசரை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X