பொது » ஊட்டியில் மழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் செப்டம்பர் 25,2019 14:35 IST
நீலகிரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஊட்டி சேரிங்கிராஸ், பஸ் ஸ்டாண்ட், ரயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டியில் இடி தாக்கியதில் பத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதடைந்தன. காந்தள் மற்றும் கிரீன்பீல்டு பகுதிகளில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் சாக்கடையை தூர்வாருவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
வாசகர் கருத்து