Advertisement

நீரில் மூழ்கி 4 மாணவர்கள் பரிதாப பலி

சம்பவம் செப்டம்பர் 25,2019 | 15:34 IST

Share

திருவாரூர் மாவட்டம், மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபுவின் மகன் ஜெயசீலன். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன் வடகண்டம் பகுதி வெட்டாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்று தண்ணீரில் மூழ்கினார். 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மாணவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, செவ்வாயன்று திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கண்டரமிணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்வரின் மகள் திவ்யா, மகன் ஸ்ரீராம், ஆகியோர் திருமலைராஜன் ஆற்றில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதேபோல் ஸ்ரீவாஞ்சியம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் விக்னேஷூம், மயிலாடி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேஷூம் புத்தாற்றில் குளிக்கச் சென்ற போது பலியாயினர். ஒரே நாளில் 4 மாணவர்கள் உயிரிழந்ததால், மாவட்ட கலெக்டர் ஆனந்த், பெற்றோர், குழந்தைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்திருந்த நிலையில் தற்போது பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X