பொது » சாவில் சந்தேகம்; 10 ஆண்டுக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் செப்டம்பர் 25,2019 19:12 IST
திருப்பூரை அடுத்த அப்பியாம்பாளையத்தை சேர்ந்த பாப்பாத்தி என்ற ராமாத்தாள் 2009ல் மரணமடைந்தார். அவரது உடல் அப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ராமாத்தாளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் அம்பிகா, பரமேஸ்வரி ஆகியோர் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ராமாத்தாளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் புதைத்த இடத்தில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவினாசி தாசில்தார் சாந்தி, பெருமாநல்லூர் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் உடலை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ராமாத்தாள் அணிந்திருந்த ஆடையை வைத்து உறுதி செய்த போலீசார், எலும்புகளை பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.
வாசகர் கருத்து