பொது » பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பயிலரங்கம் செப்டம்பர் 25,2019 19:50 IST
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி சார்பில், 'சுத்தமே சேவை -2019' மற்றும் காந்தி 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, கல்லுாரி மாணவ மாணவியருக்கு திட மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பயிலரங்கம் நடத்தப்பட்டது. பயிற்சி பட்டறையை, உள்ளாட்சித் துறை இயக்குனர் மலர்கண்ணன் துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, 'நகராட்சி பணிகள் பற்றியும், புதுச்சேரி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சுடலை, 'திட மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை பற்றியும், பொறியாளர் ரமேஷ், 'மாசு கட்டுப்பாட்டு வாரிய பணிகள் பற்றியும், நகராட்சி பொறியாளர்கள் சிவக்குமார், வெங்கடேசன் ஆகியோர் 'திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் 'நீர் சேமிப்பு பற்றியும் மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினர். பயிலரங்கத்தைத் தொடர்ந்து, நகரில் துார்வாரப்பட்ட குளங்கள் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து