Advertisement

நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மீது புகார்

பொது செப்டம்பர் 26,2019 | 14:00 IST

Share

நடராஜர் கோவில், ஆயிரங்கால் மண்டபம் ராஜ சபையில் திருமணம் நடத்த காரணமான தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேலும் இருவர் சிதம்பரம் டி.எஸ்.பி., யிடம் புகார் அளித்தனர். மனுவில், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் ராஜ சபையில் சிவகாசி பட்டாசு தொழிலதிபர் இல்ல திருமணம் ஆன்மிக மரபை மீறிய செயல். நடராஜர் கருவரையான சித்சபை மேல் ஏறி பொற்கூரை பகுதியில் மலர் அலங்காரம் செய்துள்ளனர். இதில், தவறுகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அதனால் கோவில் தீட்சிதர்கள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி ஊழல் எதிர்ப்பு மற்றும் நுகர்வோர் சுற்றுச்சூழல் இயக்கத்தின் மாநில தலைவர் ஜெகசண்முகம், மறுமலர்ச்சி வன்னியர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயனிடம் புகார் அளித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X