விளையாட்டு » தரநிர்ணய செஸ் போட்டி செப்டம்பர் 28,2019 13:00 IST
ரோட்டரி சங்க நூற்றாண்டு விழாவையொட்டி, திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகத்துடன் இணைந்து, அகில இந்திய அளவிலான தரநிர்ணய செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த, 67 தரநிர்ணயம் பெற்ற போட்டியாளர்கள் உள்ளிட்ட 286 பேர் கலந்து கொண்டனர். இதில், திருச்சியைச் சேர்ந்த, கல்லூரி மாணவர் ஆர்.கே. சபரிஷ், 7-க்கு ஆறரை புள்ளிகள் பெற்று முதலிடத்தையும் திருநெல்வேலி மணிகண்ட பிரபு, தஞ்சாவூர் டி.ஸ்ரீயாம் சுந்தர், புதுக்கோட்டை தினேஷ் கண்ணன் டி.ஸ்ரீதர் ஆகியோர் பிற பரிசுகளைப் பெற்றனர்.
வாசகர் கருத்து