Advertisement

மறைந்தார் எழுத்தாளர் மகரிஷி

பொது செப்டம்பர் 28,2019 | 14:20 IST

Share

சேலம், ஜான்சன் பேட்டையில் வசித்து வந்த எழுத்தாளர் மகஷிரி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகன் ஒருமகளும் உள்ளனர். தஞ்சையில் பிறந்த மகரிஷியின் இயற்பெயர் பாலசுப்ரமணி. இதுவரை 130 நாவல்கள் 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். இவரது நாவல்களில் இருந்து, புவனா ஒரு கேள்விக்குறி, பத்ரகாளி, சட்டத்துக்குள் சதுரம், என்னதான் முடிவு, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 1980ல் ஜெயலலிதா நடித்து வெளியான நதியை தேடி வந்த கடல் என்ற திரைப்படம்தான் இவரது நாவலை தழுவி எடுக்கப்பட்ட கடைசி படம். வன்முறை இல்லாத மென்மையான படைப்புகளுக்கு சொந்தக்காரரான எழுத்தாளர் மகரிஷிக்கு, சாகித்ய அகாடமி விருது பெற தகுதியிருந்தும், கடைசிவரை கிடைக்கவில்லை என்பதே அவரை அறிந்தவர்களின் ஆதங்கமாக உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X