பொது » பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தனி பேருந்து... செப்டம்பர் 28,2019 17:30 IST
கோவை நீலம்பூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். பின் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வு பயிற்சி பெற்றவர்களில் 2 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு 500 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். மாணவர்களுக்கென தனியாக பேருந்து இயக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து