Advertisement

பஸ் ஓட்டிய எம்.எல்.ஏ.,

பொது செப்டம்பர் 30,2019 | 16:54 IST

Share

நீலகிரியில் 350-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்தப் பேருந்துகள் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்பட பல்வேறு வெளிமாவட்டங்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிக்கு உள்ளும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான அரசு பேருந்துகள் மோசமாக இருக்கும் நிலையில், அவற்றுக்குப் பதிலாக புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 13 புதிய அரசு பேருந்து சேவையைத் தொடங்குவதற்கான நிகழ்ச்சி உதகை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்யா மற்றும் குன்னூர் அதிமுக எம்.எல்.ஏ., சாந்திராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக எம்.எல்.ஏ., சாந்தி ராமு டிரைவர் சீட்டில் அமர்ந்து பேருந்தை ஓட்டினார். கலெக்டர் இன்னசன்ட் திவ்யா கண்டக்டர் சீட்டில் அமர்ந்திருந்தார். எம்.எல்.ஏ., பேருந்து ஓட்டியதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X