Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 03-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு அக்டோபர் 03,2019 | 18:15 IST

Share

சூப்பர் ஜோடி இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. இதில் இந்தியாவின் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் வரலாற்றில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகரன்கள் சேர்த்த ஜோடி ஆனது. இதற்கு முன் 2007-08 சென்னை டெஸ்டில் டிராவிட், சேவக் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 268 ரன்கள் சேர்த்ததே அதிகம். --------------------------- கோப்பை வென்றது பாகிஸ்தான் கடந்த 2009, லாகூர் தாக்குதலுக்குப் பின், 10 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. கராச்சியின் மூன்றாவது போட்டி நடந்தது. இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. --------------------- உலக தடகளம்: சித்ரா ஏமாற்றம் உலக தடகள சாம்பியன்ஷிப் கத்தாரில் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் ஆசிய சாம்பியன் இந்தியாவின் சித்ரா, பந்தய துாரத்தை 4 நிமிடம், 11.10 வினாடி நேரத்தில் கடந்து 8வது இடம் பிடித்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஷ் சபிள், பைனலுக்கு முன்னேறினார். ---------------------- 'பிளே ஆப்' சுற்றில் மும்பை இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீசன் தற்போது நடக்கிறது. லீக் போட்டியில் மும்பை அணி 30-26 என பாட்னாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பெங்களூரு அணி 59-36 என ஹரியானா அணியை வென்றது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் டில்லி, கோல்கட்டா, ஹரியானா, மும்பை,பெங்களூரு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X