Advertisement

கோபி கல்லூரி மாணவ மாணவியர் கின்னஸ் முயற்சி

பொது அக்டோபர் 04,2019 | 16:36 IST

Share

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலக விண்வெளி வாரத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் இணைந்து மூன்று நாட்கள் நடத்தப்படும் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி நடைபெற உள்ளது. அதன் முன்னேற்பாடாகவும் விண்வெளி வாரத்தைத்யொட்டியும் இஸ்ரோவை பெருமைப்படுத்தும் விதமாகவும் iSRO GASC WSW 2019 என்ற வாசகத்தில் 4 ஆயிரத்து 285 மாணவ மாணவிகள் அணி வகுத்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் நின்று இஸ்ரோவை பெருமைப்படுத்தும் வாசகங்களை வாசித்து கின்னஸ் சாதனை புரிந்தனர் . இந்நிகழ்வை கின்னஸ் சாதனை குழுவினர் கண்காணித்து சாதனைக்காக பரிந்துரை செய்தனர் இதற்கு முன்பு, இதே வாசகத்தில் 2 ஆயிரம் மாணவ மாணவிகள் நின்றதே சாதனையாக கருத்தப்பட்டுவந்த நிலையில் இந்த சாதனையை கோபி கலை அறிவியில் கல்லுாரி மாணவ மாணவிகள் முறியடித்து இச்சாதனையை நடத்தினர். விண்வெளி கண்காட்சிகளுக்கான முன்னேற்பாடுகளை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X