ஆன்மிகம் வீடியோ » சென்னையில் பிரமாண்ட துர்கா சிலை அக்டோபர் 05,2019 19:26 IST
சென்னையில் வசிக்கும் மேற்குவங்க மாநில மக்கள் ஆண்டுதோறும், நவராத்திரி விழாவை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு விழாவை முன்னிட்டு பெசன்ட்நகரில், 15 அடி உயர அளவில் துர்கா சிலை வைத்து வழிபாடு செய்கின்றனர். துர்க்கை சிலைக்கு தினமும் காலை,மாலை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளில், துர்க்கை சிலை,பெசன்ட் நகர் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.
வாசகர் கருத்து