Advertisement

சந்திரயான்-2 எடுத்த போட்டோ வெளியீடு

பொது அக்டோபர் 05,2019 | 20:08 IST

Share

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஜூலை, 22ம் தேதி சந்திரயான்-2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும், 'விக்ரம்லேண்டர்' கருவி, செப்.7ல், நிலவை நெருங்கியது. தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது, லேண்டர் கருவியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. இதனிடையே ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுதிறன் கொண்ட கேமரா நிலவின் தென் துருவத்தில் எடுத்த மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பல்வேறு பகுதிகளை அடையாளப்படுத்தி அறியும் வகையில், தெளிவான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X