Advertisement

ரேக்ளா போட்டி; 'தெறிக்கவிட்ட' ஜோடி காளைகள்

விளையாட்டு அக்டோபர் 06,2019 | 00:00 IST

Share

பொள்ளாச்சி அருகே கக்கடவு, ரங்கம்புதூர் மற்றும் மூட்டாம்பாளையம் கிராமமக்கள் சார்பில் ரேக்ளா போட்டி ரங்கம்புதூர் கிராமத்தில் நடைபெற்றது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் கேரளாவில் இருந்தும் 400க்கும் மேற்பட்ட ஜோடி நாட்டுஇன காளைகள் பங்கேற்றன. காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்து சென்றதை கண்டு இருபுறமும் இருந்த பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமடைந்தனர். குறைந்த நேரத்தில் நிர்ணயத்த இடத்தை தொட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயமும், ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டன. நாட்டின காங்கேயம் காளைகளை பாதுகாக்க வலியுறுத்தி இப்போட்டி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X