பொது » 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அக்டோபர் 07,2019 18:45 IST
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதிச் சேவை, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனைகளை புரிபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதில், சர் பீட்டர் ரெட்கிளிப், வில்லியம் ஜி.கேலின், கிரேக் எல். செமன்ஸா ஆகிய 3 பேருக்கு பரிசு வழங்கப்படுகிறது. செல்களின் வளர்சிதை மாற்றத்திற்கும், ஆக்சிஜன் அளவுக்குமான தொடர்பை கண்டறிந்ததற்காகவும், ஆக்சிஜன் அளவை செல்கள் உணர்ந்து, தகவமைத்துக் கொள்வது எவ்வாறு என கண்டறிந்ததற்காகவும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
வாசகர் கருத்து