ஆன்மிகம் வீடியோ » கத்திபோட்டு அம்மன் அழைப்பு அக்டோபர் 09,2019 13:04 IST
பொள்ளாச்சி அருகே பெரிய நெகமத்தில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் விஜயதசமியன்று, தேவாங்க சமூகம் சார்பில் கத்திபோடும் திருவிழா நடைபெற்றது. பெரிய நெகமம் விநாயகர் கோவிலில் இருந்து அம்மனை அலங்கரித்து செண்டை மேளம் முழங்க, பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். விரதமிருந்த பக்தர்கள் நடனமாடியபடி தங்கள் உடலில் கத்திபோட்டு ரத்தம் சொட்ட, சொட்ட அம்மனை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
வாசகர் கருத்து