பொது » நடுரோட்டில் அரிவாளால் கேக் வெட்டிய ரவுடி கைது அக்டோபர் 09,2019 15:03 IST
வேலூர், ராணிப்பேட்டை, காரை லேபர் பாடசாலை பகுதியச் சேர்ந்தவர் நரேஷ். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரும், ரவுடியான இவர் மீது, மணல் கடத்தல், அடிதடி உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நரேஷ், தனது பிறந்த நாளை முன்னிட்டு நடுரோட்டில் அரிவாளால் கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட ராணிப்பேட்டை போலீஸ் உதவி ஆய்வாளர் குணசேகரனையும் அவர் தாக்கியுள்ளார். ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து நரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து