Advertisement

காளான் சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி மயக்கம்

பொது அக்டோபர் 11,2019 | 00:00 IST

Share

திருப்பூர், தாராபுரம் அடுத்த தளவாய் பட்டினம் கிராமத்தில் வசிக்கும் நாராயணசாமி - செவ்வநாயகி தம்பதியின் மகன்கள் இருவர், உறவினர் மகன் ஆகியோர், அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 3 குழந்தைகளும் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, அமராவதி பாசன வாய்க்கால் அருகே முளைத்திருந்த காளான்களை பறித்துக்கொண்டு வந்து செல்வநாயகியிடம் கொடுத்து சமைத்து கொடுக்க சொல்லியுள்ளனர். குழந்தைகள் ஆசைப்படுவதால், அவரும் காளான்களை சமைத்தார். அதை சாப்பிட்ட தம்பதி உட்பட 5 பேருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்ட மயங்கி விழுந்தனர். இதையடுத்து, அனைவரும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரணையில் அவர்கள் சாப்பிட்டது விஷக்காளான் என்பது தெரியவந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X