பொது » தமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு... அக்டோபர் 13,2019 18:53 IST
தமிழகத்தில், ஜனவரி முதல் இதுவரை, 3,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், 3 பேர் மட்டும் இறந்தனர் என்று சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறினார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வு செய்த பின் அவர் இதை தெரிவித்தார். ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து அதிகளவில் டெங்கு பரவுகிறது. இங்கு பணியாற்றும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், கடலுார் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
வாசகர் கருத்து