பொது » தாமிரபரணி பாவம் இல்லையா அக்டோபர் 14,2019 18:00 IST
திருநெல்வேலி, ஜங்ஷன் சிந்துபூந்துறையில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மாநகராட்சியால் பயோகேஸ் தயாரிக்கும் கூடம் நிறுவப்பட்டுள்ளது. மனித கழிவுகள் மூலம் உற்பத்தியாகும் பயோகேஸ், அருகில் உள்ள மாநகராட்சி மயான எரியூட்டலுக்கு பயன்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கழிவுநீரை தாமிரபரணி ஆற்றில் வெளியிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு ஆற்றில் குளிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பயோகேஸ் மையத்தில் இருந்து வெளியாகும் திரவ கழிவை தாமிரபரணியில் கலக்காமல் செய்ய மாநகராட்சி மாற்று திட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து