பொது » ஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு அக்டோபர் 15,2019 17:28 IST
ஒசூர் அருகே அகரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு செல்லும் கால்வாயில் மர்ம நபர்கள் சிலர், பல ஆயிரம் லிட்டர் ரசாயன கழிவுகளை பேரல்களில் கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்றுள்ளனர். தண்ணீரின் நிறம் மாறி அப்பகுதி முழுவதும் ரசாயன நெடியுடன் துர்நாற்றம் வீசியது. அப்பகுதியில் ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் கால்வாயில் இருந்த கழிவுகளை அகற்ற ஏற்பாடு செய்தனர். ஒசூரில் இயங்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்துதான் ரசாயன கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து